உலகம்

துபாயில் நடைப்பெற்ற கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம் தணிக்கும் மனிதநேய நிகழ்ச்சி

19views
அமீரகத்தின் கடும் வெய்யிலயும் பொருட்படுத்தாமல் உழைத்திடும் தொழிலாளர்களின் நலன் நாடும் விதமாக, கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும், அமீரக அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பான கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம் தணிக்கும் மனிதநேய நிகழ்ச்சி துபாய் ஜபல் அலி முதான் பகுதியில் உள்ள GCC நிறுவனத்தின் கட்டுமான தளத்தில் (4.7.2026) அன்று நடைபெற்றது.
கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 1500 தொழிலாளர்களுக்கு தண்ணீர், பழங்கள், லபான் பிஸ்கட், நட்ஸ், கிராசியன்ட் உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்வினை கிரீன் குளோப் உறுப்பினர்கள் அபூபக்கர், பீர் முஹம்மது, சபீர், ஜிப்ரில் மற்றும் தன்னார்வளர்கள் ஒருங்கிணைத்தனர். இறுதியில் இந்நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!