“அட்ரெஸ் சென்டர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய கபசுர குடிநீர் விநியோகம்
சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த மே 13 ஆம் தேதி காலை கோவிட் -19 இரண்டாவது அலை நிவாரண நடவடிக்கைகளுக்காக “அட்ரெஸ் சென்டர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கபசுர குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்தியது.
ஏறக்குறைய 80 நபர்களுக்கும் மேல் இந்த சேவையை பயன்படுத்திக்கொண்டனர்.
இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு பால்நிலவன் இதை முன்னெடுத்தார்..
தன்னார்வலர்கள் பலர் இந்த செயலில் தங்களை ஆர்வத்துடன் ஈடுப்படுத்திக் கொண்டனர்.
விரைவில் இதே பகுதியில் கோவிட் -கிருமியால் பாதிக்கப்ட்டவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சானிடைசர், முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான் செய்தியாளரிடம் தெரிவித்தார் திரு.பால்நிலவன்.