12views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
அறியாமை மக்களின்
அடிச்சுவடிகளில்
அரியாசனங்களை அமைப்பவர்களுக்கு
நேரம் காலம் இல்லை…
அமைத்தது போலவே
அவை அடியோடு சரிந்து
விழவும் செய்கின்றன…
நவீனத்துவங்களின்
வளர்ச்சிகளில்
மூளைச் சலவைகள்…
செயற்கை தொழில்நுட்பங்கள்…
நடந்தவற்றை மறைத்து
நடக்காதவற்றை புதுக்கி
நாட்டோர்க்குத் தந்தாலும்
உண்மையின் சிறு துளி
ஒளியாகி அந்தச் சுவரை
உடைத்து விடுகிறது…
சுய போகமும்
சுயலாபமும் மிக்க
கோரநரிகளின்
தந்திரங்களூம் எந்திரங்களும்
தவிடு பொடியாகி விடுகின்றன…
உலகின் எந்தப் போர்களும்
உயிர் கொல்லாமலும்
இரத்தம் காயாமலும்
இல்லைதான்…
ஆனால் மானுட மனங்களின்
இரக்கம் அறுத்து
சில நாடுகள் வீரர்களுக்குள்ளும்
அரக்கம் புகுத்துகின்றன…
வெளிவரும் தகவல்களில்
கொடூரங்கள் புரிபடுகின்றன…
இஸ்ரேல்களும் நாசாக்களும்
நாசங்களை மட்டுமே
நாட்டுக்குத் தந்தன…
மனைவி மக்களின்
அலைபேசி உரையாடல்கள்
தடுத்து தேவைப்பட்டால்
ஒற்றறிந்து
அவர்களைக் கொன்றுவிடுகிற
அகோரப் புத்தி
அகோரி நர மாமிசப்
பசிகளை விட மோசமானவை
கோரமானவை…
எல்லாக் காதுகளையும்
எப்போதும் அடைக்க முடியாது
உலகின் ஏதோ ஒரு மூலையில்
ஒளித் துளிகள் மனிதாபிமானமாய்
தெறித்து விழும்போது
இஸ்ரேல்களும் நாசாக்களும்
சமாதியாக்கப்படுகின்றன…
ஏனெனில் தர்மத்தின் வீரியமும்
அது செய்யும் காரியம்
மிகப் பெரியது…
add a comment






