20views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
ஏற்றி வைப்பவைதான்
அகல் விளக்குகள்…
ஆனால் இவையோ
ஏற்றா விளக்குகள்…
அறிஞர்
போற்றா விளக்குகள்…
அறிவொளி இயக்கம்
ஆண்ட தமிழ்நாட்டில்
அறிவொளி இல்லா
அபாய விளக்குகள்…
ஏற்றிய தெவரோ
எவர்தான் அவரோ…?
ஒரு துளி பற்றச்
சிந்தனை திறக்கும்
பெருநூல் பற்பல
லட்சங்கள் கோடிகள்…
சிரமங்கள் பல
சகித்துப் பொறுத்து
சிந்தனைச் சிறகின் சிறகடிப்புக்களை
வரமாய் வழங்குவர்
அறிஞர் கவிஞர்…
லாபம் நோக்காது
நன்மைகள் புரிவார்..
பாவம் அவர்களைப் புறந்தள்ளுவது…
கோடிகள் கொடுப்பினும் ஈடாகாத
ஈடில் ஞானப்
பெருக்குகள் எல்லாம்
தேடித்தருமோர்
சிந்தனைத் திறத்தார்…
நீங்களோ
நல்லவர் விடுத்து
அல்லவர் கையில்
நாட்டின் கல்வி
சேரத் தந்தீர்…
நலிவுறு கருத்துகள்
நடிகன் பெயர்களில்
நலிவுறும் நூற்கள்
நாட்டிற்குத் தந்தீர்…
சிந்தனை என்பது சீர்திருத்துவதுதான்
நீங்களோ
புந்தியில் விஷயத்தை புகட்டுகின்றீர்கள்…
எந்தமிழ் நாட்டில்
இப்படி ஒரு நிலை…
செந்தமிழ் அறவோர்
சீற்றம் கொண்டனர்
நொந்தனர் அறிஞர்
கவிஞர் பல்லோர்…
பெரியார் அவரோ
சிந்தனைச் சிற்பி…
அவர் நூல் நிலையத்தில் இருளின் ஆட்சி…
தமிழக அரசே
தமிழக அரசே…
அமிழ்தென வாழ்வென
அகமும் புறமும்…
ஈரடி நான்கடி
நலமுடன் பலவும்…
கவிழும் இருட்டு
காவிப் பொய்மைகள்
கலவாது அறிவைக்
காவல் செய்க…
தீயவை எல்லாம் தேடி எடுத்து
தீயில் இடுக… சாம்பலாக்குக…
புல்லர் தீயர்
புழுதி மனத்தவர்
கள்ளர் கண்டு
கடும் தண்டனை தருக…
அறவோர் திறவோர்
ஆன்றோர் சான்றோர்
அன்னவர் கைகளில்
ஆட்சிகள் வருக…
add a comment






