கொரோனா தொற்றின் காரணமாக எத்தனையோ தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சினமாத்துறையில் தயாரிப்பாளர்கள், தினசரி தொழிலாளர்கள் என்று பலரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக அஜித்தின் “வலிமை”, விக்ரமின் “கோப்ரா”, சிவகார்த்திகேயனின் “டாக்டர” இந்தியன் – 2, அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் பாதியில் நிற்கின்றன.
இது தவிர பல சிறிய பட்ஜெட் படங்கள் ஆரம்பித்த நிலையிலேயே இருகின்றன. அதில் அறிமுக இயக்குனர்கள், கடன் வாங்கி படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்கள், வெற்றிக்காக காத்திருக்கும் இயக்குனர்கள் என்று பலரும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.
கடந்த வருடம் படங்களே ரிலீஸ் ஆகாத நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன், சுல்தான், கர்ணன் ஆகிய படங்கள் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிய வசூல் சாதனை செய்தாலும் ஒரு வருடக் காலமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு நட்டத்தினை ஈடுகட்டும் வகையில் இந்த வசூல்கள் அமையவில்லை காரணம் அதன் பின் வேறு படங்கள் ரிலீஸ் ஆகாமையே காரணம்.
இதற்கிடையில் கொரோனா 2ஆம் அலையின் காரணமாக முழு இந்தியாவும் அதிர்ந்து போய் உள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள படங்கள் நிறைவடைந்து நிலமை வழமைக்கு திரும்பும் நிலை இவ்வருடம் அக்டோபர் மாதம் அளவில் வழமைக்கு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதன் பின் மக்கள் முன்பு போல் கூட்டம் கூட்டமாக மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா ? என்று சந்தேகமே..
தற்போதய நிலையில் தமிழ் சினிமாவே ஆட்டம் கண்டுள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.