கவிதை

கரப்பான்களின் போராட்டம்

24views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
எளிதானதில்லை
இங்கு எதுவும்
தேச எதிர்ப்புகளுக்கானவற்றை
முன்னெடுப்பது…
ஜனநாயகத்தின்
எல்லா வாசல்களும்
அடைக்கப்பட்ட ஒரு தேசம்…
இன்னும் ஜனநாயக நம்பிக்கைகளை
விட்டு விடாமல்
முன்னெடுத்து முன்னிறுத்துவது…
முடிந்து போன வயதில்
பொய் -மைகளால்
கருப்பு டைகளால்
முறுக்கிக் காட்டும்
போலி அரசியல்வாதிகளால் அல்ல…
வீறுகொண்ட வயதின்
வெற்றிப் படிக்கட்டு இளைஞர்கள்…
நீட்டான படிப்புகளை
அசிங்கமாக்கும்
அசுத்தவாதிகளுக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்களில்
ஒன்றிணைந்து இருக்கிறார்கள்…
பாசிசங்களின்
ஊது குழல்களான
எல்லா முதலைகளும்
முயல்தோல்களை
போர்த்திக் கொண்டிருக்கின்றன…
கரப்பான்களோடு
மாணவர்களை உவமித்துப் பேசிய
பதவிகளின் இரப்பானுக்கு
அவர்கள் சத்தியத்தை
பார்க்கவும் கேட்கவும்
நேரம் இல்லையாம்…
போகட்டும்…
உலகின் அனைத்து
சர்வாதிகார முடிச்சுகளும்
எப்போதும் இளைஞர்களின்
கைகளாலேயே இறுக்கப்படுகின்றன
அல்லது
அவிழ்த்து விடப்படுகின்றன…
வெறும் இளைஞர்கள் அல்ல
மாணவர்கள்…
நாளைய எதிர்காலத் தலைமுறைகள்…
கரப்பான் பூச்சிகளுக்கு
ஒரு தனித்துவம் உண்டு…
இரண்டாயிரம் கோடி
ஆண்டுகளுக்கு மேலாகியும்
அழிக்க முடியாதவை…
இவர்களின் முன்னுரை
தேசத்திற்கு ஒரு புதிய
முகவுரையைக் கொண்டு வரட்டும்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!