தமிழகம்

மதுரை அரசரடி நீர்த்தேக்க நிலையத்தில் நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

120views
மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு மதுரை குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து வரும் நீர், அரசரடி நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு பல பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை அரசரடி பகுதியில் உள்ள நீர் தேக்க நிலையத்தில் உள்ள பிரம்மாண்ட தொட்டியின் மேற்கூரை கடந்த சில தினங்களாக முறையாக பராமரிப்பு இல்லாமல் திறந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருவதால் குடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!