தமிழகம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து உசிலம்பட்டியில் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

103views
மத்திய பாஜ அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்குவதை கண்டித்தும்- ஒப்பந்த தொழில் முறை ஒழித்துவிட்டு அனைத்து தொழிலாளர்களும் நிரந்தரமாக பணி அமர்த்த வலியுறுத்தியும் -அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும்- கார்பரெட் நிறுவனங்களுக்கு ஆதாரமாக தொழிலாளர் சட்டங்களில் சட்டத்திருத்தம் செய்துள்ளதை கண்டித்தும்- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ 27000 ஆக வழங்க வலியுறுத்தியும் -விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்;கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!