தமிழகம்

ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மனு

118views
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகித்து வரும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை  வலியுறுத்தி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செப்.29 ல் பெற்றோர், பள்ளி மாணவியர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் வருவாய் கோட்டாட்சியர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வலியுறுத்தி பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் கண் இளங்கோ, செந்தில், கருணாமூர்த்தி,ஜெரோன்குமார், ஜானகி, கவிதா, முனீஸ்வரி, ஷர்மிளா, மெகர்பானு, வள்ளி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் இன்று மனு அளித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!