தமிழகம்

மண்டபம் வட்டார கலை திருவிழா

183views
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி துறை சார்பில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கலைத் திருவிழா போட்டிகள்  உச்சிப்புளி வட்டார வள மையம் , நேஷனல் அகாடமி பள்ளி, என 2 இடங்களில் நடந்தது. என்மனங்கொண்டான் ஊராட்சி மன்றத்தலைவர்கார்மேகம், புதுமடம் ஊராட்சி மன்றத்தலைவர் காமீல் உசைன், நேஷனல் பள்ளி முதல்வர் வசுதா மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண் குழு தலைவி தீபசுரேகா முன்னிலை வகித்தார். கடுக்காய்வலசை பெற்றோர் ஆசிரிய உறுப்பினர் மேக்னா கலந்து கொண்டார். 3 பிரிவுகளாக நடனம், இசைப்பாட்டு, ஒவியம், இசைக்கருவி, மொழித்திறன், நாடகம், மணல் சிற்பம், செதுக்கு சிற்பம், தனிநடிப்பு, நகைச்சுவை உட்பட 36 வகை போட்டிகள் நடந்தன.  இதில் 38 பள்ளிகளைச் சார்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.  வட்டார அளவிலான கலைத் திருவிழா குழு உறுப்பினர்களான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா, பட்டணம்காத்தான் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, வேதாளை , தாமரைக்குளம் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, காளிதாஸ், ஆகியோர் பொறுப்பேற்ற இந்நிகழ்வானது ர நாள் நடந்தது.
கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் மாலதி, அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!