தமிழகம்

கோயில் மணிகளை திருடிய 2 பேர் கைது

222views
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக கோயில்களில் மணிகள் அடையாளம் தெரியாதோரால் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. மணி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க பரமக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவினர் தனிப்படையினராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மணி திருட்டில் ஈடுபட்ட வாலங்குடி நல்லுார் சேவகன் (41), பார்த்திபனூர் கீழச்சீவன்குளம்,விஜயகுமார் (38) ஆகியோரை கைது செய்து தனிப்படையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 620 கிலோ எடை கொண்ட 403 மணிகளை கைப்பற்றினர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த பரமக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!