தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

870views
தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.  24 மணி நேர பயணிகள் விமான சேவைக்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பயணிகள் கட்டணம் குறைக்க பெரிய விமானங்களை பயன்படுத்திடவும்.  மதுரை  திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் M.P, இணைத்தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் M.P. துணைத்தலைவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா ,மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், மதுரை இயக்குனர் பாபுராஜ் துணை பொது மேலாளர் ஜானகிராமன்’மத்திய தொழிலில் பாதுகாப்பு படை துணை கம்மாண்டன்ட் உமா மகேஸ்வரன், பல்வேறு விமான நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலைய விரிவாக பணி குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தனர் .  மதுரையிலிருந்து 24 மணி நேர விமான சேவை. விமான நிலைய ஓடுதளம் பாதை விரிவாக்கம்.
கூடுதல் விமான நிறுத்துமிடம். மத்திய தொழில் பாதுகாப்பு படை கூடுதல் வீரர்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட இடங்களில் சுற்றுசுவர் கட்டும் பணி துவங்கப்படுகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் M.P கூறுகையில், ஒரு சில நல்ல செய்திகள் மதுரை விமான நிலையத்தை குறித்து எடுக்கப்பட்டுள்ளது நீண்ட நாள் கோரிக்கையான 24 மணி நேரம் மதுரை விமான நிலைய மற்றும் இரவு நேர விமானங்கள் சேவை மதுரை விமான நிலைய துறை எடுத்துள்ளது அடுத்த ஆண்டு துவக்கத்தில் மார்ச் மாதம் இதனுடைய பணிகள் தொடங்க உள்ளது அது மிகவும் பிரகாசமாக தெரிகிறது இதற்காக மத்திய விமான போக்குவரத்து துறை மற்றும் உள்துறை அமைச்சரிடமும் இது குறித்து கடைசி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சென்று பார்க்க உள்ளோம் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடை நிலையில் உள்ளது இதனால் விமான நிலையம் விரிவாக்க வழி தெளிவாக தெரிய வருகிறது மதுரை விமான நிலையத்தில் அதிக விமானங்கள் வரக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்கின்ற பயணிகளின் பயண கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது அதற்கு நல்ல முடிவு எடுப்பதற்காக பெரிய விமானங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறோம். அதுவும் வருங்காலத்தில் ஈடேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் M.P, மதுரை விமான நிலையம் ஓடுபாதை விரிவாக்கம் கையகப்படுத்த வேண்டிய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்த பட்டது அரசு துறையில் இருக்கிற இரண்டு குளங்களை வகை மாற்றம் செய்ய வேண்டிய விஷயங்கள் மட்டும் இப்பொழுது மீதம் இருக்கிறது தமிழக அரசு உயர் மட்ட குழுவிடம் தான் இருக்கிறது அதுவும் முடிந்துவிடும் என்பது நல்ல செய்தி அதனுடைய தொடர்ச்சியாக 24×7 விமானங்களை இயக்கும் முயற்சியை பல முயற்சிகளை எடுத்தோம். அதன் தொடர்ச்சியாக விமானத் துறை அமைச்சர் அவர்களை நானும் எம்பி மாணிக் தாகூர் அவர்களும் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.  வரும் வருடம் ஜனவரி மாதம் அது ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளது விமான ஓடு பாதைக்கு உண்டான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஓடுபாதை காண சுற்றுச் சுவர் 25 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அமல் படுத்தப்பட்டுள்ளது 12 மாதங்களுக்குள் சுற்றுச்சுவரின் பணி முடிவடைந்து விடும் விமான போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக உள்ளது அதற்குண்டான தேவையும் உள்ளது மற்ற விமான நிறுவனங்களை வர வைக்கக் கூடிய செயல்களும் நடைபெற உள்ளது இதைப் பற்றி குளிர்கால கூட்டத் தொடரில் ஒன்றிய அமைச்சரிடம் பேச உள்ளோம்.  முத்துராமலிங்க தேவர் பெயர் மதுரை விமான நிலையத்திற்கு சூட்டப்படுமா அனைத்துமே அரசு தரப்பிடம் உள்ளது. தமிழக அரசும் சரி ஒன்றிய அரசும் இது குறித்த முடிவு எடுக்கும்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!