தமிழகம்

திருமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா – மாணவ / மாணவிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்தல்.

199views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருமங்கலம் வட்டார வள மையம் சார்பில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைத்திருவிழா பார்வையாளர்களையும், ஆசிரிய, ஆசிரியைகளையும் வியக்க வைத்தனர்.

இத் திருவிழாவில் 6 ,7, 8 ஆகிய மூன்று வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக பரதம், நாட்டியம், குச்சுப்புடி, தப்பாட்டம் உள்ளிட்ட பழங்கலைகளை வெளிப்படுத்தி , அக்கலைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் , எழுத்துப் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவற்றில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!