தமிழகம்

இராஜபாளையத்தில் பள்ளிக்கல்வி துறைசார்பாக கலைத்திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்ற 200 க்கும் மேற்பட்ட போட்டிகள்

109views
இராஜபாளையத்தில் பள்ளிக்கல்வி துறைசார்பாக இராஜபாளையம் வட்டாரப்பகுதி அரசு பள்ளிகளிலுள்ள மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் கலைத்திருவிழா  என்ற தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட போட்டிகள் சேத்தூர் சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டிகளின் தொடக்கவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தலைமையில் தனுஷ் M.குமார். MP மற்றும் தங்கப்பாண்டியன் சட்டமன்ற உருப்பினர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்னர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்வழங்கினர்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உருப்பினர் வட்டார அளவிலுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பின் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் வெற்றி பெறும் 200 மாணவ மாணவியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல தமிழக முதல்வர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.  மேலும் இந்தியாவிலே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவரும் முதல்வர் நமது தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உருப்பினர் அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார் எனவும் அதில் சிறப்பானது கலைத்திருவிழா திட்டமாகும் எனக்கூறினார்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் குணசீலன் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!