தமிழகம்

மதுரை விமான நிலையம் நுழைவாயிலில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அம்பேத்கர் சிலையினை அமைச்சர் மூர்த்தி மற்றும் விசிக கட்சி திருமாவளவன் ஆய்வு

167views
மதுரை விமான நிலையம் செல்லும் சாலை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் Dr.அம்பேத்கரின் வெண்கல சிலையினை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதலமைச்சரின் மு க ஸ்டாலின் காணொளி அல்லது நேரடியாக வந்து திறந்து வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சிலை அமைந்துள்ள இடத்தினை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு கொண்டனர்.
தொடர்ந்து முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிலை வரும் பட்சத்தில் பாதுகாப்பு, மேடை அமைப்பது போக்குவரத்து மாற்றம் குறித்தும் தென் மண்டல துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு விட்டு சென்றானர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!