தமிழகம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நரிக்குறவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

172views
பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய(SC & ST Federation of India) ஆதி திராவிடர் மற்றும் ழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக மகாபலிபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்களுக்கு மாநில சிறுபான்மை பிரிவின் சார்பில் போர்வைகள் மற்றும் உணவு பண்டங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
சிறுபான்மை பிரிவின் மாநில செயலாளர் பிஷப். ஜான் ஏசு அடியான் தலைமையில்,  அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் மு.சா.சிங்க தமிழச்சி முன்னிலையில், மாநில ஊடகப் பிரிவின் செயலாளர் திருமதி. சசிலேகா, விசாரணை பிரிவின் தலைவர் திருமதி. லட்சுமி பிரியா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கமெண்டோ அணி தலைவர் திரு வேலு,மற்றும் போதகர் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பயனடைந்தனர்.
மேலும் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக அத்தனை பேருக்கும் மாநிலத் தலைவர் சிங்க தமிழச்சி தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர் : வி. காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!