309views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் 34 வது பட்டமளிப்பு விழா நடந்தது. முஹமது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமீது இப்ராஹிம் தலைமை வகித்தார். அறக்கட்டளை இயக்குநர். எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முஹமது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா. செந்தில்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ஜான் டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: நம் வாழ்வில் வெற்றி, தோல்வி என இரண்டும் மாறி மாறி வரும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் முயன்று வென்று சாதனை படைக்க மாணவர்களாகிய நீங்கள் உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். அண்ணா பல்கலை அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர் 5 பேர், இளநிலை பொறியியல் பட்டதாரிகள் 910 பேர், முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் 87 என பேருக்கு பட்டம் வழங்கினார்.
சென்னை எல் அண்ட் டி தலைமை செயல் அதிகாரி சபிசச்சிதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஒரு காலத்தில் மிகவும் பின் தங்கிய இப்பகுதியில் தமிழகத்திலேயே முதன் முதலாக இக்கல்லூரியை உருவாக்கிய முஹமது சதக் அறக்கட்டளையின் கல்வி பணி பாராட்டத்தக்கது. பட்டதாரிகளாகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம் உங்களின் கல்வித்தரத்தை உயர்த்தி பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நம் நாட்டியிலேயே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் மூலம் உங்கள் வீடு, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென தெரிவித்தார். மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். பட்டம் பெறும் பொறியியல் மாணவர்கள் நாளைய இந்தியாவின் முன்னோடியாக விளங்க வேண்டும் வாழ்த்தினார்.





