தமிழகம்

அரசு பள்ளி வளாகங்களில் மரக்கன்று நடும் பணி

163views
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டார அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் மரக்கன்று நடும் பணி நடந்தது. பசுமை தமிழகம், அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் புதுமடம், உச்சிப்புளி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நீண்ட கால பலன் தரும் கொய்யா, மா, சப்போட்டா, மாதுளை பழ மரக்கன்றுகள், நிழல் தரும் வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. அறக்கட்டளை நிறுவனம் ஏ.முஹமது சலாவுதீன் ஏற்பாடு செய்தார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!