தமிழகம்

காட்பாடி ரெயிலில் பெண்ணிடம் செல்போன் பறித்த குடியாத்தம் வாலிபரை கைது செய்த காவல்துறை

115views
அரக்கோணத்திலிருந்து காட்பாடி வந்த மின்சார ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் (வ.எண் 06735) மர்ம நபர் ஒருவனகத்தியைக் காட்டி செல்போனை பறித்து உள்ளான்.அப்பெண் கூச்சலிட வண்டியிலிருந்து தள்ளிவிட்டு உள்ளான். காயம் அடைந்த அப்பெண்ணை அப்பகுதி கிராம மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் காட்பாடி ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வேலூர் மாவட்டம குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூர் பூஞ்சோலை சின்ன நாகலை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஹேமராஜ் (24) என்பவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!