தமிழகம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் ஜெயந்தி பணி போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

93views
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் தேவர் ஜெயந்தி ஆகிய 2 நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பாக முறையில் முடிவு பெற்றது. இரண்டு நிகழ்வுகளிலும் சிறப்பாக பணியாற்றியஇராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, ராமநாதபுரம் உட்கோட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்.
எஞ்சிய உட்கோட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வழங்கிய சான்றிதழ்களை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் வழங்கி பாராட்டினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!