தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பிரபல திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் பங்கேற்பு

351views
விருதுநகர் தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா, பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
புத்தகத் திருவிழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கலந்து கொண்டார். புத்தக திருவிழா இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் “வாசிப்பின் சாளரங்கள்” என்ற தலைப்பில் பேசினார். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன் குழுவினரின் புத்தகங்களின் நோக்கம் அன்பை வளர்ப்பதா? அறிவை பெருக்குவதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, நான் விருதுநகரைச் சேர்ந்தவன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

புத்தகக் கண்காட்சி நடைபெறும் பள்ளியின் முன்னாள் மாணவன் நான். இங்கு பள்ளியில் உள்ள நூலகத்தில் நான் படித்த முதல் புத்தகம் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய இரும்புக்குதிரை நாவல் தான். அதை படித்து முடித்தவுடன் வாசிப்பு பழக்கம் எனக்கு தன்னால் வந்தது. புத்தகங்களை தேடித்தேடி மதுரைக்கு சென்று விடுவேன். அங்குள்ள நடைபாதை கடைகளில் ஏராளமான புத்தகங்களை வாங்கி படித்திருக்கிறேன். நான் வீட்டில் செலவழித்த நேரத்தைவிட, நூலகங்களில் இருந்த நேரம் தான் அதிகம். இன்று இந்த மேடையில் உங்கள் முன்பு நான் நின்று பேசுவதற்கு புத்தகங்களின் வாசிப்பு பழக்கம் தான் ஒரே காரணம், புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்கும், நல்ல புத்தகங்கள் நம்மை நல்வழிப்படுத்தும், புத்தகம் வாசிக்கும் மனிதர்கள் நிச்சயம் என்றாவது ஒரு நாள் மேன்மை நிலையை அடைவார்கள் என்று வசந்தபாலன் பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நினைவு பரிசுகள் வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!