தமிழகம்

கால்நடை சுகாதார முகாம் பசுங்கன்றுகளை பராமரித்தவர்களுக்கு பரிசு

300views
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இடையர்வலசை கால்நடை மருந்தகம் உடையார்வலசையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. சாத்தக்கோன்வலசை ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் சீ.முத்துமாரி , வார்டு உறுப்பினர்கள் இந்திரா, சீனி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கால்நடை உதவி மருத்துவர்கள் தேவகி, டாப்னி ஆகியோர் சிசிச்சை, ஆலோசனை வழங்கினர். இதில் குடற்புழு நீக்கம் மருந்து வழங்கப்பட்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்பட்டது. நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பசுங்கன்றுகளை சிறப்பாக பராமரிப்பு செய்த உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடை ஆய்வாளர் ஜோஷி தங்கராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கல்யாணி, சீனிவாசன், ஜானகி, ஊராட்சி செயலர் புல்லாணி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!