226
உண்மை அறி
நன்மை புரி
தீமை எரி – இந்தத்
திரட்சியே பெளத்த நெறி!
*
நன்மையின்
தொகுப்பு
அன்பம்!
தீமையின்
தொகுப்பு
வன்மம்!
*
நல் மனம்
நறுமணம்
நாலாபக்கமும் வீசும்
பூக்களின் குணம்!
நல் எண்ணம்
நல்லொழுக்கம்
நன்மை பேசும்
சந்தன மணம்!
தம்மம்
தலையாகும்
கம்மம்
வினையாகும்!
*
இன்றைய
நன்மையால்
என்ன பயன்
என எண்ணும்
ஏ மனிதா!
நாளைய
வரலாறு
சொல்லும்
உன் பெயர்
ஏர் புதிதாக!
*
சிந்தனை
சொல்
செயல்
நேர்கோட்டில்
நின்றால்!
படைகட்டி
பகைவிரட்டி
பரணிபாடி
தரணியாள
முடியும்!
அறத்தால்
ஆடினால்
அடவுகட்டி
ஆட்சியாள
முடியும்!
*
செயல்
சொல்
சிந்தனை
சிறக்க
சிறந்த
இறையாண்மை
இருந்தால்!
இயற்கை அன்னை
சிறகு விரிக்க
வாசல் திறக்கும்
வானமெல்லாம்
உன் பெயரைப் பதிக்கும்!
*
நற்சிந்தனை
விதை!
நல்சொல்
விருட்சம்!
நல்செயல்
விளைச்சல்!
இதுவே
இறுதி
இலக்கு!!
அறுவடை
நாளின்
கிழக்கு!!
*
எண்ணம்
போல்
வாழ்க்கை!
சொன்னதை
போல்
நீ
செய்தால்!
தலைகீழ்
ஆனாலும்
தலைநிமிரும்
தீ
*
உலகமே
உனது
உள்ளங்கையில்!!
கலகமே
கடைசி
மனிதனுக்கானல்!!
காலமே
உனது
காலடியில்!!
*
பிண்டம்
உன்னுல்
முறையாக
இயக்கமானால்!
அண்டமும்
உன்னால்
நிறைவாக
இயங்கும்!!
*
அடக்கினால்
ஆணவ
திமிரை!
பறக்கும்
ஆகாயத்தில்
குதிரை!!
*
ஐம்புலன்களை
அடக்கி
அமைப்பானால்!
ஐம்பூதங்கள்
அடங்கி
அதிகாரமாகும்!
*
-
ம. சங்கத்தமிழன்,
மாவட்ட செயலாளர், விசிக இளைஞர் அணி
add a comment