உலகம்உலகம்செய்திகள்

சீனாவுக்கு உதவும் உலக சுகாதார அமைப்பு : வெளியான அதிரவைக்கும் தகவல்!

57views

உலக நாடுகள் பல கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் வெளியேறியிருக்கவேண்டும் என சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சீனா அந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்துவருகிறது. உண்மையை அறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் சார்பில் சீனாவுக்கு அனுப்பப்பட்டவர்களும், தெளிவான உண்மையைக் கூறாமல் ஏதேதோ கூறிவந்தார்கள்.

என்றாலும், புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மட்டும் சீனா மீது கண்வைக்கும்படி தனது உளவுத்துறைக்கு கட்டளையிட்டார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வுஹானில் உருவானதை மறைப்பதற்காக, உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள் சீனாவுடன் திரை மறைவு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கலாம் என அதிர்ச்சியடையவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முதலில், கொரோனா வைரஸ் சீன ஆய்வகம் ஒன்றிலிருந்து பரவியிருக்க வாய்ப்பேயில்லை என்று கூறியது உலக சுகாதார அமைப்பு. இப்போது, அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதைத் தொடர்ந்து, வுஹான் ஆய்வகத்தில் மனிதத் தவறுகள் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள் நிபுணர்கள்.

சீனாவுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானத்துக்கும் உள்ள நெருக்கமான உறவின் காரணமாகவே உலக சுகாதார அமைப்பினால் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவியது என்ற குற்றச்சாட்டை வலுவாக முன்வைக்க முடியவில்லை என The Sunday Times பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் துவங்குவதற்கு இரண்டு மாதம் முன்பு சீனா சென்ற டெட்ராஸ் அதானம், சீன அதிபர் Xi Jinpingஐ சந்தித்துள்ளார். சீனாவுடன் நீண்ட கால நட்பு வைத்துள்ளவரான டெட்ராஸ் அதானம் முன்னாள் எத்தியோப்பிய வெளியுறவு அமைச்சராவார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் என்ற தனது பதவியை பயன்படுத்தி அவர் சீனாவுக்கு சாதகமானவர்களை பதவியிலமர்த்தியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜிம்பாபே நாட்டின் சர்வாதிகாரியான Robert Mugabe என்பவரை நல்லெண்ண தூதுவராக நியமித்துள்ளார் டெட்ராஸ் அதானம்.

ஜிம்பாபேக்கு சீனா நிதி உதவி செய்ய, சீனாவின் அராஜக செயல்களுக்கு ஜிம்பாபே வக்காலத்து வாங்க, இப்படி ஒரு பக்கம் ஒரு அரசியல் செய்துகொண்டிருக்கும் சீனாவுக்கு டெட்ராஸ் அதானத்தின் ஆதரவு உள்ளது.

ஆக, சீனாவின் மீது உலக சுகாதார அமைப்பு கொரோனா உருவானது தொடர்பில் குற்றச்சாட்டுகளை வலுவாக முன்வைக்க இயலாத வகையில் சீனா அதன் மீது தன் தாக்கத்தை செலுத்தியுள்ளது. எனவே, உலக சுகாதார அமைப்பின் இந்த தோல்வியே கொரோனா பரவலை தடுக்க இயலாததற்கு காரணம் என அதன் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!