உலகம்உலகம்செய்திகள்

பெரும் பதற்றம்.. சிறுவன் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை.. அடுத்து கொலையாளி செயலால் போலீசார் அதிர்ச்சி !

150views

இங்கிலாந்து நாட்டில் அண்மைக்காலமாக அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடந்ததை சிறிதும் எதிர்பார்க்காத பொதுமக்களில் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கினர் . இருப்பினும் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள் . அடுத்த நிமிடமே அங்கு போலீசார் சுற்றிவளைத்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொலையாளியும் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 10 வயது சிறுவனும் அடக்கம் என்பதால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டு மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் பல்வேறு நாட்டுதலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிளைமவுத் மாகாண அமைச்சர் ஜானி மெர்சர் கூறுகையில், கொலைக்கான காரணத்தை தேடி வருகிறோம். ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!