சொன்னது போலவே இந்தியாவை அவ்வளவு எளிதாக வெற்றி பெற அயர்லாந்து அனுமதிக்கவில்லை. 4 ரன்களில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
40 ஓவர்களில் 246 ரன்கள் குவிக்கப்பட்டது, எப்படியோ கடைசி ஒவரில் 17 ரன்கள் தேவைபப்ட்ட நிலையில் உம்ரன் மாலிக் அபாரமாக வீசி 12 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்ட உம்ரன் மாலிக் கடைசி ஓவரில் வெற்றி பெறச் செய்தாலும் 4 ஓவர் 42 ரன்களில் 3 பவுண்டரி 2 சிக்சர்களை விளாசினார்.
இந்த வெற்றியுடன் அயர்லாந்துக்கு எதிராக தோல்வியடையாத தொடர்ச்சியை இந்தியா கடைப்பிடித்து வருகிறது,
தீபக் ஹூடா பிரமிப்பூட்டும் ஷாட்களுடன் 55 பந்தில் சதம் எடுத்தார். இவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்டதாகத்தான் தெரிகிறது.
சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா கூட்டணி 176 ரன்களை 87 பந்துகளில் குவித்து டி20 உலக சாதனை 2வது விக்கெட் கூட்டணி அமைத்தனர்.
கடைசி ஓவரை உம்ரன் மாலிக்கிடம் கொடுக்கும் தைரியமான முடிவை எடுத்தார் ஹர்திக் பாண்டியா, அவரும் அதை சிறப்பாக நிறைவு செய்தார்
ஹூடா ஆட்டமிழந்த பிறகு அயர்லாந்து புகுந்து தினேஷ் கார்த்திக், அக்சர் படேலை டக்கில் அவுட் ஆக்க ஹர்திக் பாண்டியா 13, சூரியகுமார்யாதவ் 15 என்று ஸ்கோரை 225 ரன்களுக்கு உயர்த்தினர்.
அயர்லாந்து பவர் ப்ளேயில் 74 ரன்களை எடுத்து கடைசி வரை விடாப்பிடியாக விரட்டி 221 ரன்கள் வரை வந்து போராடி தோற்றது,