உலகம்உலகம்

வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களுக்காக புதிய வானொலி உதயம் “ரேடியோ கேரளா 1476 AM”

104views
வளைகுடா மலையாளிகளுக்கு ஓணம் பரிசாக ரேடியோ கேரளா 1476 AM தனது முழு நேர ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களின் நலன்களைப் புரிந்துகொண்டு, கேளிக்கை-அறிவு- மற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது ஒலிபரப்பை இன்றைய தினம் (08/09/2022) தொடங்கியது ரேடியோ கேரளா.
செப்டம்பர் 1 ஆம் தேதி துபாயில் இருந்து ஆரம்பமான அதன் வானொலி ஒலிபரப்பை கேரளா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் இருப்போர் கேட்கலாம்.http://www.radiokeralam.com என்ற இணையதளம் மூலமாகவும் ஆப் மூலமாகவும் உலகில் எந்த பகுதியில் இருந்தும் கேட்கலாம்.
நிகழ்ச்சி இயக்குனராக பாடகர் ஜி. ஸ்ரீராம். செய்தித் துறைக்கு முன்னணி பத்திரிகையாளர் எம்.வி.நிகேஷ் குமார் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக பிரபல திரைப்பட நட்சத்திரமான பிரியங்கா நாயருடன், Rj ஸ்ரீலஷ்மி, RJ அனு, RJ லாவண்யா, RJ தீபக் ஆகியோர் இடம் பெறுகின்றனர். இசை அமைப்பாளர் ஜாஸி கிஃப்ட் மற்றும் கிராண்ட்மாஸ்டர் ஜி.எஸ்.பிரதீப் ஆகியோரும் வானொலியின் ஒரு பகுதியாக இருந்து சிறப்பிக்கவுள்ள நிலையில் அமீரகத்தின் பிரபல பெண் அறிவிப்பாளரும் சமூக வலைதள பிரபலமுமான RJ சாரா ஒரு மணி நேர தமிழ் நிகழ்ச்சியினை வளைகுடா தமிழர்களுக்காக பிரத்யேகமாக தொகுத்து வழங்குகின்றார்.
இதன் தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய், அபுதாபி, அலைன் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் சாலையோர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடக்க விழாவின் சிறப்பாக இன்று முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் 76 நிமிடங்கள் என்ற இடைவிடாத நேரலையோடு தனது சேவையை தொடங்கியுள்ளது. ரேடியோ கேரளா 1476 AM வளைகுடா பிராந்தியத்தில் உள்ள ஒரே AM ரேடியோ அலைவரிசையாகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!