உலகம்உலகம்

ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியா விமான தளத்தில் தொடர் குண்டு வெடிப்பு

64views
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள், ‘சோவியத் யூனியனில்’ இருந்த, உக்ரைன் நாட்டின், ஒரு பகுதியான கிரிமியா, ரஷ்யாவுடன், சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
இப்பகுதியில் இன்று விமான தளத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஒரு பலியானதாகவும், பலர் காயமடைந்ததாக மாஸ்கோ டைம்ஸ் என்ற இணைய தள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெடார் குண்டு வெடிப்பு காரணமாக அங்கு விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் காணப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!