விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
படத்தில் வில்லனாக விக்ரமும் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் விக்ரமின் கெட்டப் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு இல்லை. அதனால் படக்குழுவினர் இப்படத்தை அமேசான் ஒட்டி தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் விக்ரம் இப்படத்தினை திரையரங்கில் வெளியிடுவதற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்துள்ளார் காரணம்துருவ் விக்ரம் இப்படத்தில் நடித்துள்ளார் திரையரங்கில் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதற்காக பல மாதங்களாக திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என கூறி வந்தார்.தற்போது இப்படம் OTT வெளியாக உள்ளது.
விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை ஆனால் மகன் திரைப்படம் ரசிகர் இடம் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் கண்டிப்பாக இப்படம் விக்ரமிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுத்தரும் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.