உலகம்

பிலிப்பைன்சை புரட்டிய ராய் புயல் – பலி எண்ணிக்கை 375 ஆக அதிகரிப்பு

55views

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ராய் புயல் புரட்டிப் போட்டது.

கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

சூறாவளிக் காற்றுடன் பயங்கர மழை பெய்ததால் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வாகன போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்தன. விவசாய பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிலிப்பைன்சில் ராய் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!