உலகம்

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க போரிஸ் ஜான்ஸன் உத்தரவு

142views

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க போரிஸ் ஜான்ஸன் உத்தரவிட்டுள்ளார்.அடுத்த வாரம் முதல் பிரிட்டனில் கொரோனா தாக்கம் காரணமாக இடப்பட்ட கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நீக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.இரவு விடுதிகள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சனின் இந்த அசாத்திய நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது பிரிட்டனில் தற்போது செலுத்தப்படும் பூஸ்டர் ஊசி. இரு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிரிட்டன் குடிமக்கள் பலருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.இதனால் கட்டுப்பாடுகள் நிறைந்த பிளான் பி-ஐ நீக்கி, கட்டுப்பாடுகள் அற்ற பிளான் ஏ-வுக்கு தான் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் அதித கொரோனா தாக்கம் காரணமாக பலவித ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த போரிஸ் ஜான்சன், தற்போது வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து உள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் போரிஸ் ஜான்சன் தான் சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு உள்ளேயே அவரது இந்த திட்டத்துக்கு பலவித எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர்களை தற்போது போரிஸ் ஜான்சன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகிறார். .பிரிட்டனின் வெகு சில இடங்களில் மட்டுமே ஒமைக்ரான் மற்றும் டெல்டா தாக்கம் அதிகரித்து வருவதாகவும் பெரும்பாலான இடங்களில் குறைந்துவிட்டது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!