104views
அசுரன், புதுப்பேட்டை, காலா படங்களில் நடித்த நிதிஷ் வீரா, கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45.
2006-ல் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் நடிகராக அறிமுகமானார் நிதிஷ் வீரா. அசுரன், காலா, வெண்ணிலா கபடிக்குழு, கழுகு போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் அவர் மரணமடைந்துள்ளார்.
நிதிஷ் வீராவின் மரணத்துக்கு இயக்குநர் செல்வராகவன் உள்பட பலரும் சமுகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.