விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் மற்றும் முகமது ரிஸ்வானின் தரமான சாதனைகளை தகர்த்தெறிந்த சூர்யகுமார் யாதவ்

57views
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்த ஓராண்டிலேயே அணியின் முன்னணி வீரர் மற்றும் மேட்ச் வின்னராக வளர்ந்துள்ளார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி ஜெயிக்க, சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டும். அந்தளவிற்கு அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளை படைத்துவருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 சதத்தை அடித்த சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பையிலும் நன்றாக ஆடினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 36 பந்துகளில் 69 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த சூர்யகுமார் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த 3 சிக்ஸர்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் மொத்தமாக 45 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரிஸ்வான் 42 சிக்ஸர்களை விளாசியிருந்த நிலையில், அதை முறியடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
2022ம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 வரை) 732 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ஷிகர் தவான் (2018ல் 689 ரன்கள்) சாதனையை முறியடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!