இந்தியா

ஜூலை 21ல் நேரில் வாங்க.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

37views

கொரோனா மற்றும் சுவாசக்குழாய் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஜூலை 21ல் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவினர் சம்மன் வழங்கி உள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு பங்குகளை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் விசாரிக்க அமலாக்கப்பிரிவு முடிவு செய்தது. இதற்காக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் 5 நாட்கள் ஆஜராகி அமலாக்கத்துறையினரின் கேள்விக்கு பதில்கள் அளித்துள்ளார். ராகுல்காந்தியிடம் மொத்தம் 50 மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடந்துள்ளது. இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

முன்னதாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தான் ஜூன் 2ல் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஜூன் 8 விசாரணையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமையில் இருந்தார். அதன்பிறகு அவர் ஜூன் 12ல் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வேளையில் அவரது சுவாசக்குழாயில் அவருக்கு பூஞ்சை தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 20ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க கூறியிருந்தனர். இதையடுத்து அமலாக்கப்பிரிவு விசாரணையில் இருந்து சில வாரங்கள் விலக்குகோரி சோனியா காந்தி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இதற்கு அமலாக்கப்பிரிவினர் ஒப்புக்கொண்டனர்.

இதனால் சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜராகாமல் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் தான் தற்போது சோனியா காந்திக்கு மீண்டும் அமலாக்கப்பிரிவு சம்மன் வழங்கி உள்ளது. அதன்படி ஜூலை 21ல் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராகும்பட்சத்தில் அவரிடமும் சில நாட்கள் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!