உலகம்

கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

57views

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். 74 வயதாகும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்றார். இவருக்கென்று தற்போது வரை உலகம் முழுவதும் ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆனால், இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அர்னால்டு ஸ்வாஸ்னேகரை பெரும்பாலும் ஹாலிவுட் நடிகராக தான் நமக்கும் தெரியும். ஆனால், தயாரிப்பாளர், விளம்பர மாடல், தொழிலதிபர், முதலீட்டாளர், ஆசிரியர், கொடையாளர், சமூக ஆர்வலர், அரசியல் பிரமுகர் மற்றும் தொழில்முறை உடற்கட்டு கலைஞர் போன்ற பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு.

இந்த நிலையில், அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் அர்னால்டு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின. மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல கார்கள் கடுமையான சேதத்துடன் இருப்பதை அந்தப் படங்கள் காட்டுகின்றன. இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அர்னால்டு எவ்வித காயமும் இல்லாமல் தப்பினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!