172
மருத்துவமனைக்குள் லக்ஷ்மியும் செழியனும் நுழைய செழியனுக்கு திடீர் யோசனை “அம்மா நீ இங்கேயே காத்திரு நான் குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன்” என்று சொல்லி கிளம்புகிறான்.
அதற்குள் லட்சுமி அங்குள்ள செவிலியரை விசாரித்து தேவி இருக்கும் அறையை நோக்கி செல்கிறாள்.
உள்ளே சென்றதும் தேவி உறங்கிக் கொண்டிருக்கிறாள் தொட்டிலில் உள்ள குழந்தையை பார்த்து ” பெண்ணா …பையனா இருந்தா நல்லா இருக்கும்”
என தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறாள்.
இது தேவி கண்விழித்து பார்த்துவிட்டாள்.
அவளைப் பார்த்ததும் நல்ல விதமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை
“வாங்க அத்தை” என்று கூப்பிட்ட தேவிக்கு இருக்கட்டும்…… இருக்கட்டும்…..
என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தன் குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கிய செழியன் அறையில் ஆவலோடு நுழைகிறான்.
அவனது கண் குழந்தையை நோக்கி செல்கிறது.
தொட்டில் அருகே லக்ஷ்மி நின்றிருக்க தனது குழந்தையை தூக்கி தர சொல்கிறான்.
குழந்தையைத் தூக்கிய அனுபவம் இல்லாதபோதிலும் அனுபவமுள்ளவனை போல பக்குவமாய் தூக்கினான்.
அந்த பிஞ்சு விரல்கள் கை தொடும் போது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
முகத்தோடு முகம் வைத்து ரசிக்கிறான்.
எவ்வளவுதான் தேவியின் மேல் கோபம் இருந்தாலும் தனது குழந்தையை பார்த்த பின்பு அவனது கோபம் குறைய தேவியிடம் “எப்படி இருக்க ??? அத்தை எங்க???”
“அம்மா எனக்கு உணவு எடுத்துட்டு வர போயிருக்காங்க …..”
“அப்படியா சரி….”
அவனும் அடுத்த வார்த்தை பேச ஆரம்பித்தான்.
குழந்தையை புடவையில் படுக்க வைத்திருக்கிறார்கள்
நான் நல்ல மெத்தை வாங்கி வந்திருக்கிறேன் அதில் போட்டு என் மகளை படுக்க வை என்று அவனே அதை பிரித்து படுக்கையை தொட்டிலில் போட்டு குழந்தையை படுக்க வைக்கிறான்.
தன் மகனிடம் நல்லவிதமாக காட்டிக்கொள்ள…”செழியா… நம் வீட்டிற்கு மகாலக்ஷ்மியே வந்துவிட்டாள் இனி நமக்கென்ன கவலை “என்று சொல்லி வெளியே நடிக்கிறாள்.
உள்ளே தேவியின் அம்மா உணவை எடுத்துக்கொண்டு நுழைகிறாள்.
இவர்கள் இருவரையும் பார்த்தபின் “வாங்க தம்பி…..வா லட்சுமி…..காபி சாப்பிடுங்க” என்று டம்ளரில் ஊற்றி இருவருக்கும் கொடுக்க லட்சுமி அதை வாங்க மறுக்கிறாள்.
“நாங்க இப்பதான் குடிச்சிட்டு வந்து இருக்கும் அதனால வேண்டாம். முதலில் தேவிக்கு உணவு கொடுங்கள் பிள்ளை பெற்றவளுக்கு எவ்வளவு நேரம் உணவு கொடுக்காமல் இருப்பது” என்று உரக்கப் பேச
மகனின் மனதில் அது பதிகிறது. தனது தாய் தன் மனைவி மீதும் மகள் மீதும் எவ்வளவு அக்கறை காட்டுகிறாள் என யோசிக்கத் தொடங்கினான்.
குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் இப்போது கடைக்கு கிளம்புகிறேன்.
மறுபடி மாலையில் நான் வந்து பார்க்கிறேன். என்று சொன்னதும் லட்சுமியின் முகம் மாற இருந்தும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து இருவரும் புறப்படுகிறார்.
மாலை நேரத்தில் சரவணனும், கவிதாவும் குழந்தையை வந்து பார்க்கிறார்கள்
சரவணனுக்கு தன் மகனையே சிறுவயதில் பார்த்ததுபோல் தோன்றுகிறது.
குழந்தையைத் தூக்கிய சரவணன் இவள் என் அம்மா என்று குழந்தைக்கு ரத்தின அம்மாள் என பெயர் சொல்லி கூப்பிடுகிறார்.
கவிதா அறையைவிட்டு சென்றதும் அவளுக்கு தெரியாமல் மருமகளிடம் சட்டைப் பையில் உள்ள பணத்தை எடுத்து மா இதை வைத்துக்கொள் உனக்கு ஏதாவது தேவை என்றால் வாங்கிக்கொள் இன்று மருமகளிடம் கொடுத்துவிட்டு செல்கிறார்.
செழியன் இருவேளைகளிலும் பார்க்க வருகிறான்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
😍👌
😍😍