இந்தியா

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு

49views

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் கூறியதாவது: ரூ.4,600 கோடிமதிப்பில் 2-வது கட்ட ஒகேனக்கல்கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்திலும், காவிரி மேலாண்மைஆணையத்திலும் தெரிவிக்கவில்லை. கர்நாடக தமிழக எல்லையான ஒகேனக்கலில் தமிழக அரசுதன்னிச்சையாக இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படியே தமிழக அரசு செயல்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவு நீரையே கர்நாடகா தமிழகத்துக்கு திறந்துவிடும். இந்த திட்டத்துக்காக கூடுதல் நீர் திறந்துவிடப்படாது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் கர்நாடகாவின் அனுமதியை பெறாமல் தமிழக அரசுஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள இந்த திட்டத்தை கர்நாடக அரசு எதிர்க்கும். சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் முறையிடும். இவ்வாறு அமைச்சர் கோவிந்த் கூறினார்.

இதற்கு தர்மபுரி விவசாய அமைப்பினர், ”தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கலுக்கு கர்நாடகஉரிமைக் கோருவது சரி அல்ல”என்று கண்டனம் தெரிவித் துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!