விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு ஐபிஎல்தான் முக்கியம் டெஸ்ட் மேட்சில் ஆர்வம் இல்லை- முன்னாள் இங்கிலாந்து வீரர் தாக்கு

201views

ஐபிஎல் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து முன்னாள்கள் தாக்கிப் பேசி வருவது வழக்கமாகி வருகிறது, இந்தப் பட்டியலில் தற்போது முன்னாள் ஸ்டைலிஷ் இடது கை பேட்டர் டேவிட் கோவர் சமீபத்தில் இணைந்தார், இப்போது பால் நியுமேன் என்ற வீரர், இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் ஆடுவதுதான் விருப்பமே தவிர டெஸ்ட் மேட்ச்களை ஆட அவர்கள் விரும்புவதேயில்லை என்று கூறியுள்ளார்.

நாளை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடந்த முறை நடக்காத 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது, இந்திய அணியில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை படுகேவலமான பயிற்சி ஆட்டத்தை ஆடினர். நெட் பிராக்டீஸை விடவும் அது கேவலமாகவே இருந்தது. ரோஹித் சர்மா கோவிட்டில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போனதால் கடந்த முறை இந்தியா 2-1 என்று தொடரை வெல்வதற்கு ஏற்பட்ட சாத்தியத்துக்குக் காரணமான அவரது பேட்டிங் இப்போது இல்லை.

இந்நிலையில் பால் நியூமேன் என்ற முன்னாள் வீரர் டெய்லி மெயில் என்ற பத்திரிகையில் இந்திய அணியை தாக்கி எழுதும்போது, “கடந்த ஆண்டு ஓல்ட் டிராபர்டில் முடிந்திருக்க வேண்டிய டெஸ்ட் போட்டி, இப்போது ஆட வந்துள்ளனர். காசு கொடுத்து பார்க்க வரும் பொதுமக்களை இவர்கள் எப்படி இன்சல்ட் செய்கிறார்கள் பாருங்கள். கடைசி நேரத்தில் ஆட முடியாது என்று கூறி டெஸ்ட் கிரிக்கெட்டையும் இழிவு படுத்தினார்கள்.

கொரோனாவைக் காரணம் காட்டி ஆடாமல் போனது பெரிய நகைச்சுவைக்குரியதாகும். இந்திய அந்தப் போட்டியை ஆட விரும்பவில்லை என்பதே உண்மை. ஐபிஎல் ஆடச் செல்வதற்காக 5வது டெஸ்ட் போட்டியை புறக்கணித்தனர். இதன் மூலம் அபாயகரமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டனர்” என்று கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டே மைக்கேல் வான், ஏன் கோவிட்டைக் காரணம் சொல்லி விட்டு போகவேண்டும் ஐபிஎல் என்று கூற வேண்டியதுதானே என்று வெளிப்படையாகவே குட்டு வைத்தார். மேலும் இங்கிலாந்து பத்திரிகைகளில் வெஸ்ட் இண்டீஸ் ஒருமுறை இங்கு வந்து சம்பளப் பிரச்சனை காரணமாக பாதியிலேயே போனபோது எப்படியெல்லாம் பிசிசிஐ அவர்களை மிரட்டியது? இப்போது இவர்கள் ஐபிஎல் தொடருக்காக மக்கள் பணம் கொடுத்து ரிசர்வ் செய்த போட்டியைப் புறக்கணித்து ச்செல்வதை யார் கேட்பது, ஊருக்கு ஒரு சட்டம் பிசிசிஐக்கு ஒரு சட்டமா என்று கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!