சினிமாசெய்திகள்

இந்தியன் – 2 தாமதம் – லைகா நிறுவனத்தை குற்றம்சாட்டும் ஷங்கர்.

133views

ங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ஆம் பாகத்தினை மிகுந்த பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க, ஷங்கர் புதிய கதையுடன், கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ராகுல் பிரீதி சிங் ஆகியோரின் நடிப்பில் அனிருத்தின் இசையில் தயாராகிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக 2 பேர் பலியான நிலையில் படிப்பிடித்து ரத்து செய்யப்பட்டது.

அதன் பின் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பு நடக்கவில்லை அதன் பின் கமலுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி, கமலின் அரசியல் பிரவேசங்கள் காரணயமாக படப்பிடிப்பு தொடரந்து இரத்தாகிக் கொண்டே சென்றது.

இதனால் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணையும், இந்தியில் ரன்வீர் சிங்கையும் வைத்து 2 படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்தார். இதனால் லைகா நிறுவனம் தங்கள் படத்தினை இயக்கி முடிக்கும் வரை ஷங்கருக்கு வேறு படங்களை இயக்க தடை விதிக்குமாறு நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இதன்பின் நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இரண்டு தரப்பும் சுமூகமாக பேசி தீர்மானித்துக் கொள்ளும் படியும் தீர்ப்பு வழங்கியது. எனினும் இதுவரை பிரச்சினை முடிவக்கு வரவில்லை.

லைகா நிறுவுனமோ தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், இந்தி தயாரிப்பாளர் சங்கம் என்று புகார் அளித்துள்ளது.

இதற்கு பதில் வழங்கிய ஷங்கர் இந்தியன் – 2 படத்தின் தாமதத்திற்கு முழு காரணம் லைகா நிறுவனம் என்றும், கடந்த ஒரு வருட காலத்தில் படத்தினை தயாரிப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை அதனால் தான் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் படத்தின் பட்ஜென் ஆன 270 கோடியை குறைக்க சொன்ன லைகா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கினங்க தான் 250 கோடியாக குறைத்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் ஜூலை மாதம் முத் படப்பிடிப்பு நடத்த தான் சம்மதம் தெரிவித்திருந்து போதும் லைகா நிறுவனம், நீதிமன்றம், தெலுங்கி தயாரிப்பாளர் சங்கம், இந்தி தயாரிப்பாளர் சங்கம் என்பவற்றை நாடியுள்ளமை த்னை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வந்து ஷங்கர், கமல் என்ற இரண்டு பிரமாண்டங்களின் தரமான படம் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!