அமெரிக்காவின் கடந்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டன. அத்துடன ஹாலிவுட் சினிமா பணிகள் முற்றாக தடைப்பட்டன.
தற்போது ஹாலிவுட் திரையுலகம் இயங்கி வரும் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள திரையரங்குகள் 14 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு விழாவாக கொண்டாடிய திரைத்துறையினர், “மீண்டும் பெரிய திரை” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான ஆர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தள்ளனர்.
இதன்போது தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் ஹாலிவுட் படங்களின் டிரெய்லர்கள் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆரவாரங்களை வெளிப்படுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.