தமிழகம்

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் ; நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்..

109views
கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை இல்லம் தேடி கல்வித் திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசு அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு களப்பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இயங்கி வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு பள்ளியிலும் தலா 10 பேர் வீதம் மொத்தம் 100 மாணவ, மாணவியர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
இந்த கல்வி ரீதியான களப்பயணம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கள துரை மற்றும் வட்டார வள மைய கண்காணிப்பாளர் பேபிமாலதி ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில், கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளரும் வணிக நிர்வாகவியல் துறை கௌரவ விரிவுரையாளருமான முனைவர் மருதமுத்து மற்றும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளருமான முனைவர் ஸ்ரீலங்கா மீனாட்சி ஆகியோர் தலைமையில், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை இல்லம் தேடி கல்வித் திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் பெற்றுக் கொண்டார். கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி களப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளரும் கணிதத்துறை கௌரவ விரிவுரையாளருமான ஆறுமுகம் தலைமையில் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்து துறையினரும் தற்போது 12ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தத்தமது துறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கி கூறியதோடு வருங்கால வேலை வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர். நேர்காணல் நிகழ்வுகள் அனைத்தும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கலைவாணி தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த களப்பயணத்தில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!