தமிழகம்

சிவகாசியில், ‘மார்பக ஊடு கதிர் கருவி’ ஸ்கேன் சென்டரை, மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்

196views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபலமான தனியார் ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில், நவீன தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய ‘மார்பக ஊடு கதிர் கருவி (Digital Mammogram) கதிர் சோதனை வசதியை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிவகாசியின் பிரபல டாக்டர் ஞானகுருசாமி பேசும்போது, மாறி வரும் உலக சூழ்நிலையில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்களை கண்டறிவதில் ஸ்கேனர் கருவிகளின் உதவி அளப்பறியது. பொதுவாக மார்பக சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஸ்கேன் செய்யும் வசதி தென் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. தற்போது சிவகாசியில் மார்பக ஊடு கதிர் ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மார்பகம் சம்பந்தப்பட்ட நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையளித்து, மார்பக நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று பேசினார். நிகழ்ச்சியில் சிவகாசியின் பிரபலமான மருத்துவர்கள் ஞானகுருசாமி, வெங்கடசுப்பிரமணியன், ராமநாதன், ரமா வெங்கடேஷ், செல்லத்தாய், ஆர்த்தி, வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!