தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர பணியாளராக கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

16views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் வேலூர் மின்திட்ட கிளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில் நடந்த கவன ஈர்ப்புஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் கோட்டத்தலைவர் மணி தலைமை தாங்கினார்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டுதினர் கூலி நேரடியாக வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி இன்றைய தவெக அரசு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பேசினர்.
மாநிலத்துணை தலைவர் கோவிந்தராஜ், வேலூர் திட்ட செயலாளர் சின்னதுரை, பொருளாளர் முரளிகிருஷ்ணன், இணை செயலாளர் ஜெகன், மாவட்ட செயலாளர் தருமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கோட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!