427
தினம் ஓர் எள்ளுருண்டை,வாரம் ஓர் புடலங்காய், வாழைத்தண்டு,15ல் ஒரு முறை,பாலும், அகத்தியம் உண்டு வந்தால் உடலின் நச்சகற்றி,புண்ணகற்றி இரத்த சுத்தியால் இளமை கூடும்.
புடலையும், பீர்க்கங்காயும் இரத்த அழுத்தம் குறைய இறைவன் அளித்த இலவச மருந்துகள்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி: இத்தாவரத்தின் இலை,பூக்கள்,விதையை நல்லெண்ணயிலிட்டு காய்ச்சி குளித்தால் கண்,சூடு தணியும்.
கீழாநெல்லி: இத்தாவரம் மற்றும் வேரினை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து உண்டால் மஞ்சள் காமாலை நோய் நீங்கும்,சிறுநீர் தடையின்றி வெளிப்பட உதவும்.
வாழை இலைப்பட்டைச்சாறு நாகப்பாம்பு நச்சினை முறிக்கும்.தீக்காயத்தினை குணப்படுத்தும்.
தினமும் தேவை குரோமியம்! : சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சீராக இருக்கும்.
இதயம் காக்கும் காளான் : காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
டாக்டர் லிங்கசெல்வி, மதுரை
add a comment