தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சிறப்பு முகாம்

67views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், சிவகாசி வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் பிரிவில், குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பாண்டியன் தலைமையில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பெயர் திருத்தம், நகல் கார்டு, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், தொடர்பு எண் இணைத்தல் என மொத்தம் 42 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, சான்றுகள் சரிபார்த்து தீர்வு செய்து உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!