தமிழகம்

என் கிராமம், என் ஊரு, என் மக்கள் என தன்னார்வலராக குண்டும் குழியுமான சாலை சீரமைக்க, ஏழை, எளிய மக்களுக்கு தினமும் உணவளிக்கும் மதுரை வைக்கம் பெரியார்நகர் லூர்து மேரி,

61views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சாமநத்தம் ஊராட்சி வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் லூர்து மேரி (வயது 62). இவரது கணவர் பெயர் செல்வம் .மற்றும் இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்
மதுரை மாநகருக்கு மிக அருகே உள்ளது சாமநத்தம் ஊராட்சியில் பெரியார்நகர் பகுதி உள்ளது.
அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதியான பெரியார் நகருக்கு குண்டும் குழியுமான சாலை, சாக்கடை என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் தனது சொந்த செலவில் கட்டிட இடிபாடுகளை விலைக்கு வாங்கி குண்டும் குழியுமான சாலையில் கொட்டி பள்ளங்களை தனி ஒருவராக சீரமைக்கிறார்.
மேலும் கொரோனா களத்தில் இருந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வரும் லூர்து மேரி தினமும் 20 பேர் முதல் 50 பேர் வரை உணவு அளித்து வருகிறார்
சமையல் கேட்டரிங் தொழில் செய்து வரும் லூர்து மேரி தனது இரு மகன்கள் ஆட்டோ ஓட்டி வரும் வருமானத்தை கொண்டு இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
வைக்கம் பெரியார்நகர் பகுதியை பொருத்தவரை அடிப்படை வசதிகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டு கொள்ளாமல் தானே களத்தில் “தனி ஒருவராக.” நின்று செயல்படும் லூர்துமேரியின் செயல்பாடுகள் பாரட்டுக்குரியது.
” தனி ஒருவ(ள்) ராக” சாலை சீரமைப்பு, ஏழை, எளியவருக்கு உணவு அளித்தல் போன்றவற்றை சிறப்பாக செய்து வரும் லூர்து மேரி போன்றவர்களின் செயல் பாராட்டத்தக்கது,
தான் ஒரு காலத்தில் உணவுக்கு கஷ்டப்பட்டதை உணர்ந்து இப்பகுதி மக்கள் உணவுக்காக வருந்த கூடாது என்று தினமும் உணவு அளித்து வருகிறார்.
அதிலும் கூட தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தயாராகும் உணவையே சாப்பிட வரும் அனைவருக்கும் தயார் செய்து கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!