தமிழகம்

ஒரே நாடு , ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்கிறது. மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

83views
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து?
நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இந்துத்துவா தத்துவத்தையும் சனாதன தர்மத்தை வைத்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஒரே கலாச்சாரம் என்று நடைமுறைக்கொவாததும் ஒருபோதும் நடக்க கூடாததுமான ஒரு விஷத்தை பிஜேபி கூட்டம் கக்கி கொண்டிருக்கின்றது.
அதற்கு சரியான பதிலை தமிழ்நாடு கொடுக்கும் தமிழகத்தில் அதற்கு இடமில்லை என்பதை வரலாறு நிரூபிக்கத்தான் போகிறது.
பாஜகவை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது சனாதன தர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்றுக்கொள்ளாது இந்துத்துவா தத்துவத்தினுடைய அடிப்படையில் தான் அவர்கள் நாட்டிலே ஒருமைப்பாட்டை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .
இது கோல்வால்கர் ஒரு காலத்தில் சொன்னது சனாதன தர்மம் இந்துத்துவா. அதற்கு பிறகு இந்தி. இந்திக்கு பிறகு சமஸ்கிருதம். இதுதான் அவருடைய திட்டம். அவருடைய நோக்கம் அது நடக்காது.
நாளைய கூட்டத்தில் அது பற்றி விரிவாக நான் சொல்வேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
செய்தியாளர் :வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!