தமிழகம்

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகளின் வீட்டில் உபயோகப்படாத பயனற்ற பொருட்களை வைத்து பயனுள்ள கலைப்பொருட்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

436views
தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி ஊராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்கள் மாணவர்கள் சமுதாய பிரமுகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் வசிக்கும் நகரத்தை ஊரினை சுத்தமான நகரமாக உருவாக்கும் முன்மாதிரியான திட்டம்தான் என் குப்பை என் பொறுப்பு என்று திட்டமாகும்.
இத்திட்டம் அனைத்து நகராட்சி பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இத்திட்டத்தினை பற்றி பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு பொருட்களை மீள பயன்படுத்துவது பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறி உசிலம்பட்டி நகர்மன்றத்தலைவர் சகுந்தலா மாணவர்களிடம் சுத்தத்தை பற்றியும் மாணவர்கள் தன் வீட்டினையும் தான் வசிக்கும் தெருவினையும் சுத்தமாக எவ்வாறு வைத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார். உசிலம்பட்டி 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரகதீஸ்வரன் உசிலம்பட்டி நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் சிவகுமார் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனற்ற பொருட்களைக் கொண்டு பல்வேறு பயனுள்ள பொருட்களாக செய்து வந்திருந்தனர்.
மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சிறப்பாக செய்த மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் சகுந்தலா பரிசுகள் வழங்கினார்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!