தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; தனுஷ்குமார் எம்.பி. பங்கேற்பு

49views
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக் கிழமை (24-02-2023 ) நடைபெற்றது. தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா முகாமிற்கு தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் M. தனுஷ் குமார் கலந்து கொண்டு முகாமினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் முரளிசங்கர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி, இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி புற்று நோயினை ஆரம்ப காலத்திலேயே எப்படி கண்டறிவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான சிகிச்சைக்கான வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் பொதுமக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் எடுத்து கூறியதுடன், புற்றுநோய் இல்லா தென்காசி மாவட்டத்தினை உருவாக்குவதற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எப்போதும் தயாராக உள்ளது என்றும், அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். முகாமில் மருத்துவர்கள் கீதா, லதா, ஸ்வர்ணலதா, விஜயகுமார், கார்த்திக், அறிவுடை நம்பி, ஷெரின், நாகஜோதி, தீபிகா ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் 10 நிமிடங்களில் பொது மக்களுக்கு அறிவித்ததுடன், மேற்கொண்டு சிகிச்சைக்கான வழிமுறைகளும், சிறந்த மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி, முத்துலட்சுமி, வசந்தி மற்றும் செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!