+ 2 அரசு பொது தேர்விற்கு, முதுகு ,கை ,கால்களில் போல்ட் நட் வைத்து ஆபரேஷன் செய்த நிலையில் தனது கனவை நிறைவேற்ற வந்த பள்ளி மாணவி
557views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவி உமா மகேஸ்வரி. இப்பள்ளியில் சிறந்த மாணவியாக அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்று வந்த நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு , தனது வீட்டில் மேல்மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததில், முதுகு ,கை ,கால் உள்ளிட்டவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் முழுவதும் போல்ட், நட் வைத்து ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த நிலையில் , பள்ளியில் சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்று வரும் உமா மகேஸ்வரி, தனது பெற்றோரின் கவலையை போக்கும் நிலையிலும், தனது கனவை நிறைவேற்றும் விதமாகவும், பிளஸ் டூ அரசு பொது தேர்வு எழுதியே தீருவேன் என்று உறுதியுடன், பள்ளிக்கு வந்தார்.
வீட்டிலிருந்து காரில் அழைத்து வரப்பட்டு , அங்கிருந்து பள்ளி அலுவலர்கள் அவருடைய உடல் நிலையை கருத்திற் கொண்டு அரசு உத்தரவின் பேரில், மாணவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு படுக்கையில் அமர்ந்து தேர்வை எழுதினார்.
இது குறித்து மாணவி உமா மகேஸ்வரி நிருபர்களிடம் அளித்த பேட்டியில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் , உடல் முழுவதும் எலும்புகள் முறிந்து ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில், தனது கனவான மருத்துவர் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு பொது தேர்வு எழுத வந்ததாகவும் , தந்தை கூலி வேலை செய்து வருவதால் குடும்பம் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளதால், அவர்களை காப்பாற்றும் நோக்கில் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்
add a comment